ரோகித் சர்மா சாதனையை முறியடித்து அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கேஎல் ராகுல்!

By Rsiva kumar  |  First Published Nov 13, 2023, 3:06 PM IST

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிகவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.


உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 410 ரன்கள் குவித்தது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 128* ரன்களும், கேஎல் ராகுல் 102 ரன்களும், சுப்மன் கில் 51 ரன்களும், ரோகித் சர்மா 61 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர்.

Rohit Sharma and Kapil Dev: ஒரு கேப்டனாக 40 ஆண்டுகளுக்கு பிறகு கபில் தேவ் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணியானது 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், கேஎல் ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் இடம் பிடித்துள்ளார். அவர், 64 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார்.

ODI World Cup Semi Finals: உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கான அணிகளில் நடந்த முக்கியமான நிகழ்வு!

இதற்கு முன்னதாக ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 106 ரன்கள் குவித்துள்ளார்.

49 பந்துகள் – 106 ரன்கள் – எய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா)

59 பந்துகள் – 109 ரன்கள் – டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

61 பந்துகள் – 109 ரன்கள் – ஹென்ரிச் கிளாசென் (தென் ஆப்பிரிக்கா)

62 பந்துகள் – 101 ரன்கள் – கேஎல் ராகுல் (இந்தியா)

63 பந்துகள் – 126* ரன்கள் – ஃபகர் ஜமான் (பாகிஸ்தான்)

63 பந்துகள் – 131 ரன்கள் – ரோகித் சர்மா (இந்தியா)

உலகக் கோப்பையில் முதல் முறையாக 9 பவுலர்களை பயன்படுத்திய டீம் இந்தியா!

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 97 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் டக் அவுட்டில் வெளியேறினர். விராட் கோலி 85 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ரன் எடுக்கவில்லை. அதன் பிறகு கேஎல் ராகுல் கடைசி வரை நின்று இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பவுலிங் பவுலிங்குன்னு கோஷமிட்ட ரசிகர்கள்: 11 ஆண்டுகளுக்கு பிறகு 10ஆவது விக்கெட் கைப்பற்றிய ரோகித் சர்மா!

ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் 91 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் சதம் அடிக்க ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க வேண்டும். ஆனால், அவர் பவுண்டரி அடிக்க முயற்சிக்கவே, பந்து சிக்ஸருக்கு சென்றது. இதன் காரணமாக அவர் 97 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஆனால், நேற்றய போட்டியில் சதம் விளாசியுள்ளார். இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் 8 இன்னிங்ஸ் விளையாடி 97, 19*, 34*, 27, 39, 21, 8, 102 என்று மொத்தமாக 347 ரன்கள் எடுத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சாதனை!

click me!