
ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் சிஎஸ்கேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி.
இன்று சனிக்கிழமை 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
IPL 2023: காயத்தால் ஐபிஎல்லில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்..! குஜராத் டைட்டன்ஸுக்கு பின்னடைவு
பிற்பகல் 3.30 மணிக்கு மொஹாலியில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி இதுவென்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். கேகேஆர் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பாதியில் ஆடாததால் நிதிஷ் ராணா கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சௌதி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் பிளேயர்கள் - நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், டேவிட் வீஸா, வைபவ் அரோரா, சுயாஷ் ஷர்மா.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரான் சிங் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ராகுல் சாஹர், நேதன் எல்லிஸ், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் பிளேயர்ஸ் - ரிஷி தவான், மேத்யூ ஷார்ட், அதர்வா டைட், மோஹித் ரதீ. ஹர்ப்ரீத் பாட்டியா.