KKR vs PBKS: டாஸ் ரிப்போர்ட்.. கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் 2 அணிகளிலும் தலா ஒரு அதிரடி மாற்றம்

Published : Apr 01, 2022, 07:16 PM IST
KKR vs PBKS: டாஸ் ரிப்போர்ட்.. கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் 2 அணிகளிலும் தலா ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் இன்று நடக்கும் போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

கேகேஆர் அணி ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ள நிலையில், தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்ற அதே தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதற்கு முன் இந்த சீசனில் நடந்த 7 போட்டிகளில் 6ல் இலக்கை விரட்டிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. 2வது இன்னிங்ஸில் பனியின் தாக்கத்தால் பந்துவீசுவது கடினமாக இருப்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.  அதனால் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை.

கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக விக்கெட் கீப்பிங் செய்துவந்த ஷெல்டான் ஜாக்சன் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார். ஷெல்டான் ஜாக்சன் நீக்கப்பட்டதால், சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பிங் செய்கிறார்.

கேகேஆர் அணி:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

ககிசோ ரபாடா இந்த போட்டியில் ஆடுவதால் சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். அந்த ஒரு மாற்றம்  மட்டும் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ராஜ் பவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!
SMAT 2025: ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!