IPL 2022: அந்த ஒரு விஷயத்துல ஸ்பெஷல் பயிற்சி எடுத்துட்டு வந்து அடுத்த மேட்ச்ல பட்டைய கிளப்புவோம்! ஜடேஜா உறுதி

Published : Apr 01, 2022, 05:22 PM IST
IPL 2022: அந்த ஒரு விஷயத்துல ஸ்பெஷல் பயிற்சி எடுத்துட்டு வந்து அடுத்த மேட்ச்ல பட்டைய கிளப்புவோம்! ஜடேஜா உறுதி

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் தொடர்ந்து 2 தோல்விகளை அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, அடுத்த போட்டிக்கு முன்பாக ஈரமான பந்தில் தீவிர பயிற்சி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 15வது சீசனில் தொடர்ந்து 2 தோல்விகளை அடைந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, அடுத்த போட்டிக்கு முன்பாக ஈரமான பந்தில் தீவிர பயிற்சி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6ல் இலக்கை விரட்டிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே, சன்ரைசர்ஸுக்கு எதிராக ஒரு போட்டியில் டிஃபெண்ட் செய்து வெற்றி  கண்டது.

அதற்கு முக்கிய காரணம், 2வது இன்னிங்ஸின்போது பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பந்துவீசுவது பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுதான். 2வது இன்னிங்ஸில் பனி அதிகமாக இருப்பதால் அது 2வதாக பேட்டிங் ஆடும் அணிக்கு சாதகமாக அமைகிறது.

அப்படித்தான், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 210 ரன்கள் அடித்தும், அதை தடுக்கமுடியாமல் தோல்வியை தழுவியது. லக்னோ அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினார்கள் என்றாலும், பனியின் தாக்கத்தால்தான் சிஎஸ்கே பவுலர்களால் திறம்பட பந்துவீசமுடியவில்லை என்பது எதார்த்தம்.

இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, அடுத்த போட்டிக்கு முன்பாக ஈரமான பந்தில் பந்துவீசி தீவிர பயிற்சி செய்ய வேண்டும். பவர்ப்ளேயிலும், மிடில் ஓவர்களிலும் எங்கள் வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினார்கள். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருந்தது. பவுலிங் யூனிட்டாக நாங்கள், எங்கள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார் ஜடேஜா.

ஏப்ரல் 3ம் தேதி சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!