IPL 2023: DC-யிடம் மண்டியிட்டு சரணடைந்த KKR அணி..! கடைசி ஓவரில் ரசல் 3 சிக்ஸர்கள்..! DC-க்கு எளிய இலக்கு

By karthikeyan V  |  First Published Apr 20, 2023, 10:42 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்து 128 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. முதல் 5 போட்டிகளிலும் தோற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இன்று ஆடிவருகிறது. 

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன்  டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  கேகேஆர் அணியில் 4 மாற்றங்களும், டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்களும் செய்யப்பட்டன.

Tap to resize

Latest Videos

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார். 

IPL 2023: ஐபிஎல்லில் முதல் வீரர்.. வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி

கேகேஆர் அணி: 

ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டும் எந்த பலனும் இல்லை. ஜேசன் ராய், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். லிட்டன் தாஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் வெங்கடேஷ் ஐயர் (0), நிதிஷ் ராணா(4), மந்தீப் சிங்(12), ரிங்கு சிங்(6) என அனைத்து வீரர்களும் மளமளவென ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஜேசன் ராய் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL 2023: ஐபிஎல்லின் தலைசிறந்த வீரர்கள் அவங்க 2 பேர் தான்.. விராட் கோலி கருத்து..! அந்த 2 பேரில் தோனி இல்ல

96 ரன்களுக்கே கேகேஆர் அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி வீரராக இறங்கிய வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 6 பந்துகளை எதிர்கொண்டு ஆட, மறுமுனையில் நின்று கடைசிவரை ஆட்டத்தை எடுத்துச்சென்ற ஆண்ட்ரே ரசல், கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசியதால் கேகேஆர் அணி 20 ஓவரில் 127 ரன்கள் அடித்தது. 128 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி விரட்டுகிறது.
 

click me!