ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகள் நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கேகேஆர் அணிகள் சற்று சொதப்பலாக ஆடி தோல்விகளை அடைவதால் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன. ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி கேகேஆரை இன்று எதிர்கொள்கிறது. கேகேஆர் அணிக்கும் இந்த போட்டியில் வெற்றி தேவை என்பதால் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.
டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிரித்வி ஷா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேகேஆர் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி ஃபெர்குசன், நாராயண் ஜெகதீசன் மற்றும் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு, ஜேசன் ராய், லிட்டன் தாஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மந்தீப் சிங் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.
IPL 2023: டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
கேகேஆர் அணி:
ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), மந்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.