#DCvsKKR ஆண்ட்ரே ரசலின் கடைசி நேர அதிரடியால் ஓரளவிற்கு தப்பிய கேகேஆர்..! டெல்லி கேபிடள்ஸுக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 9:24 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 20 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 155 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், கேகேஆரை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் பேட்ஸ்மேன்கள் மறுபடியும் சொதப்பினர். தொடக்க வீரர் நிதிஷ் ராணா 15 ரன்னில் அக்ஸர் படேலின் பவுலிங்கில் ஸ்டம்பிங் ஆகி வெளியேற, ராகுல் திரிபாதி 19 ரன்னில் ஸ்டோய்னிஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் திணறிவரும் ஷுப்மன் கில்லுக்கு, இந்த போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 38 பந்தில் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மோர்கன், சுனில் நரைன் ஆகிய இருவரும் லலித் யாதவ் வீசிய ஒரே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேற, தினேஷ் கார்த்திக் 10 பந்தில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

11வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட ஆண்ட்ரே ரசல், டெத் ஓவர்களில் அடித்து ஆடி 27 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாச, 20 ஓவரில் 154 ரன்களை அடித்தது டெல்லி அணி. இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 150 ரன்களை கடக்கவைத்தார் ரசல்.

155 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி விரட்ட தொடங்கியது.
 

click me!