இந்தியாவை அலறவிடும் கொரோனா..! ராஜஸ்தான் ராயல்ஸை தொடர்ந்து டெல்லி கேபிடள்ஸ் அணியும் நிதியுதவி

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 6:55 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் அதிகளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் அவற்றை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா கொரோனா 2ம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேகேஆர் அணியில் ஆடிவரும் ஆஸி., ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சத்தை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத்தொடர்ந்து ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ ரூ.41 லடச்த்தை நன்கொடையாக வழங்கினார்.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசியன் டிரஸ்ட் இணைந்து, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் பலரிடம் நிதி வசூலித்து ரூ.7.5 கோடியை நன்கொடையாக வழங்கியது.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் ரூ.1.5 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் இந்தியாவில் ஐபிஎல் தேவையா என்ற கேள்வி எழுந்த நிலையில், கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை ஐபிஎல் வழங்கும் என்பதன் அடிப்படையில், ஐபிஎல் பாதுகாப்பான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. 

ஐபிஎல் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல; ஐபிஎல் அணிகளுக்கு பொறுப்பும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்து ஐபிஎல் அணிகள் நிதியுதவி செய்துவருகின்றன.
 

click me!