இன்னொரு அணி சரியாக யூஸ் பண்ணாத சாம்பியன் வீரரை அடுத்த சீசனில் கேப்டனாக்கும் சிஎஸ்கே.? மெகா ஏலத்திற்கான திட்டம்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 6:20 PM IST
Highlights

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு நடப்பு சீசனே கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால், அடுத்த சீசனுக்கான கேப்டன் குறித்த விவாதம் இப்போதே நடந்துவரும் நிலையில், யாரை கேப்டனாக்கலாம் என்பது குறித்து பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல்லில் கடந்த சீசனுக்கு முன்பாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், கடந்த சீசன் சிஎஸ்கேவிற்கு சரியாக அமையவில்லை. ஆனால் இந்த சீசனில் சிஎஸ்கே மீண்டும் செம கம்பேக் கொடுத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக ஐபிஎல்லில் வெற்றிநடை போடுவதற்கு அந்த அணியின் கேப்டன் தோனி முக்கிய காரணம். முதல் சீசனிலிருந்தே அணியை வலுவான அணியாக கட்டமைத்து, வெற்றிகளையும் கோப்பைகளையும் குவித்து கொடுத்தவர் கேப்டன் தோனி. 

தோனி இல்லாத சிஎஸ்கே அணியை நினைத்து பார்ப்பது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் கொடுங்கனவாக இருக்கும் என்றாலும், அதற்கான காலம் வந்துவிட்டது. தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம். எனவே அடுத்த கேப்டன் குறித்த விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், அடுத்த ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், கேன் வில்லியம்சனை ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக இருக்கலாம். ஆனால் கேப்டன்சி என்று பார்க்கையில், சிஎஸ்கே அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்றால், கேன் வில்லியம்சன் தான் அதற்கு சரியான நபர்.

கேன் வில்லியம்சனை, தற்போது அவர் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருக்கும் நிலையில், அந்த ஏலத்தில் கேன் வில்லியம்சனை எடுத்து சிஎஸ்கே அணி அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று பிரக்யான் ஓஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!