இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா..! ரூ.7.5 கோடி நிதியுதவி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 4:47 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.7.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், ஆக்ஸிஜன் தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

இந்தியா முழுவதுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் அதிகளவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் அவற்றை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா கொரோனா 2ம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேகேஆர் அணியில் ஆடிவரும் ஆஸி., ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சத்தை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கியுள்ளார். அவரைத்தொடர்ந்து ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ ரூ.41 லடச்த்தை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசியன் டிரஸ்ட் இணைந்து, ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் பலரிடம் நிதி வசூலித்து ரூ.7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க பாட் கம்மின்ஸ் நிதியுதவி வழங்கி முன்னெடுப்பு செய்ய, அவரைத்தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கிவருகின்றனர்.
 

click me!