லாஸ்ட் சான்ஸ் கொடுக்கும் கேகேஆர்.. சொதப்புனா அடுத்த மேட்ச்ல காலி..! #DCvsKKR அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 4:13 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணி போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும், கேகேஆர் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளையும் பெற்றுள்ள நிலையில், அகமதாபாத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா, ரபாடா, இஷாந்த் சர்மா, ஆவேஷ் கான்.

இந்த சீசனில் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா ஜோடி ஒரு போட்டியில் கூட, ஒரு தொடக்க ஜோடியாக ஜொலிக்கவில்லை. எனவே கேகேஆர் அணியின் தொடக்க ஜோடியை மாற்ற வேண்டும் என்ற கருத்து வலுவாக எழுந்தது. பல முன்னாள் ஜாம்பவான்கள் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். கேகேஆர் அணி நிர்வாகத்தின் மனதிலும் இது இருக்கும். ஆனாலும் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கில் - ராணா தான் தொடக்க ஜோடியாக ஆடுவார்கள். ஆனால் இது அந்த ஜோடிக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம். இந்த போட்டியிலும் சொதப்பும்பட்சத்தில், அடுத்த போட்டியில் தொடக்க ஜோடி மாற்றப்படும்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
 

click me!