#MIvsRR அவரு இன்னும் குவாரண்டினை முடிக்கல.. அதனால் ஆடமாட்டார்..! உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

Published : Apr 29, 2021, 02:40 PM IST
#MIvsRR அவரு இன்னும் குவாரண்டினை முடிக்கல.. அதனால் ஆடமாட்டார்..! உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏற்ற இறக்கமாகவே அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, 3வது வெற்றியை எதிர்நோக்கி இன்று களம் காண்கிறது.

டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ டை, லிவிங்ஸ்டோன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் விலகியதையடுத்து, பட்லர், மில்லர், கிறிஸ் மோரிஸ் மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தனர்.

4 வெளிநாட்டு வீரர்கள் விலகியதையடுத்து, தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வாண்டெர்டசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அணியில் இணைந்துள்ளார். ஆனால் அவர் இன்னும் குவாரண்டினை முடிக்கவில்லை என்பதால், இன்றைய போட்டியில் அவர் ஆடமாட்டார். அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே 4 வெளிநாட்டு வீரர்களுடன் தான் ராஜஸ்தான் அணி களமிறங்கும்.

ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. டெல்லி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஜெய்தேவ் உனாத்கத்திற்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபால் களமிறங்கலாம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயாஸ் கோபால், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026 : இந்த 5 வீரர்கள் தான் உலகக் கோப்பை முடிவை தீர்மானிப்பார்கள்
T20 World Cup 2026: உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த அதிரடி பேட்ஸ்மேன்கள்