ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு..! மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு

By karthikeyan VFirst Published Nov 15, 2022, 3:39 PM IST
Highlights

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு அறிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த 5 முறையும் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மேட்ச் வின்னர் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டு.

ஐபிஎல்லில் ஒரே அணிக்காக ஆடியதில் விராட் கோலிக்கு அடுத்தவர் கைரன் பொல்லார்டு. 2010ம் ஆண்டிலிருந்து 2022 வரை 13 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய பொல்லார்டு, மும்பை இந்தியன்ஸை தவிர ஐபிஎல்லில் வேறு அணிக்கு ஆடியதேயில்லை.

டி20 கிரிக்கெட்டில் சொதப்பும் இந்திய அணி.. தோனியை களமிறக்கும் பிசிசிஐ..!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3412 ரன்கள் அடித்துள்ளார்; 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  ஐபிஎல்லில் ஒரே அணிக்காக அதிக போட்டிகளில் ஆடிய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் பொல்லார்டு.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மேட்ச் வின்னர் பொல்லார்டு. 

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் 13 சீசன்கள் சிறப்பான பங்களிப்பை செய்த பொல்லார்டை விடுவிப்பது மரியாதையாக இருக்காது என்பதால் அவரை மரியாதையாக விடுவித்துள்ளது. பொல்லார்டே ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?

மும்பை அணிக்காக ஆடிய தன்னால் வேறு ஒரு அணிக்கு ஆடுவதை தன்னால் யோசித்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ள பொல்லார்டு, ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காரன் என்றால் எப்போதுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காரன் தான் என்றும்,  மும்பை இந்தியன்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

click me!