டி20 கிரிக்கெட்டில் சொதப்பும் இந்திய அணி.. தோனியை களமிறக்கும் பிசிசிஐ..!

By karthikeyan VFirst Published Nov 15, 2022, 2:50 PM IST
Highlights

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என டி20 கிரிக்கெட்டில் பெரிய தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை தழுவிய நிலையில், டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த ஆண்டே ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் பெரிதாக  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என மிகப்பெரிய தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஏமாற்றம் அளித்தது இந்திய அணி. 

ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?

டி20 உலக கோப்பையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டுக்கான சரியான அணியை தேர்வு செய்யாததுதான் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எனவே டி20 உலக கோப்பை மாதிரி பெரிய தொடர்களை ஜெயிக்க வேண்டுமென்றால், டி20 கிரிக்கெட்டை பற்றி நன்கறிந்த, அந்த அறிவு அதிகமுள்ள முன்னாள் வீரரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும், இந்தியாவிற்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டனுமான தோனியை டி20 அணிக்கான ஆலோசகராக களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடிகொடுத்த ஷமி! அறிவுரை சொன்ன அஃப்ரிடி;அதை உங்கஆளுக்கு சொல்லுப்பா அஃப்ரிடி

டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மூளை தோனி. எனவே அவரை களமிறக்கி அடுத்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!