ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?

By karthikeyan VFirst Published Nov 14, 2022, 9:02 PM IST
Highlights

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர் அதுல் வாசன் கருத்து கூறியுள்ளார்.
 

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ச்சியாக இருபெரும் டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியதையடுத்து, இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம், இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.

இந்திய அணியில் சில சீனியர் வீரர்களின் இடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவியதால் ஃபைனலுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. டி20 உலக கோப்பையிலாவது சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்தியாவை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடிகொடுத்த ஷமி! அறிவுரை சொன்ன அஃப்ரிடி;அதை உங்கஆளுக்கு சொல்லுப்பா அஃப்ரிடி

ஆனால் அதுமட்டும் காரணமல்லை. இந்திய அணியின் டாப் ஆர்டர் பவர்ப்ளேயில் சரியாக ஆடாதது, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்காதது ஆகிய காரணங்களால் தான் இந்திய அணி டி20 உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. கடந்த டி20 உலக கோப்பையில் கோலி கேப்டன்சியில் இந்திய அணி தோற்றதும், இந்த டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்தும் விதமாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும், கேப்டனான பிறகு அவரது பேட்டிங்கும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட சோபிக்கவில்லை. அவரது ஓபனிங் பார்ட்னரான ராகுல் ஒன்றிரண்டு அரைசதங்கள் அடித்தாலும், அவரது இன்னிங்ஸ் அணிக்கு உதவவில்லை. ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் அல்லது முக்கியமான ஆட்டத்தில் உதவும் வகையில் இல்லை.

டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம். இந்திய அணியின் கேப்டன்சி மற்றும் அணி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை அறிவித்தது ஐசிசி! 2 இந்திய வீரர்களுக்கு இடம்; ஒரு ஆஸி., வீரர் கூட இல்லை

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அதுல் வாசன், ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலம் முடிந்துவிட்டது என்றே கருதுகிறேன். ரோஹித் சர்மாவை கேப்டனாக தொடர்வதால் இந்திய அணிக்கு இனி எந்த பிரயோஜனமும் இல்லை. டி20 அணி கேப்டன்சிக்கு 2 பேர் இருக்கின்றனர். ஹர்திக் பாண்டியா - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம். அதற்காக கேப்டன் ரோஹித் மீது மட்டும் குறை கூறமுடியாது. ஏனெனில் எந்த முடிவும் அவர் தனிப்பட்ட முறையில் எடுப்பதல்ல. அணி நிர்வாகம் தான் முடிவெடுத்திருக்கும். அவர் களத்தில் எங்கு ஒளிந்துகொள்ளலாம் என்ற முடிவை மட்டுமே எடுத்திருப்பார் என்று அதுல் வாசன் விமர்சித்துள்ளார்.
 

click me!