டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியை கிண்டலடித்த ஷோயப் அக்தருக்கு முகமது ஷமி தக்க பதிலடி கொடுக்க, அவருக்கு ஷாஹித் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையை அஃப்ரிடி தயவுசெய்து அவர்கள் நாட்டு வீரர்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும்.
டி20 உலக கோப்பை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை 2வது முறையாக வென்றது. இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏமாற்றமளித்தன.
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
undefined
ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்ற நிலையில், ஃபைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதி இந்திய அணிக்கு இல்லை என்று ஷோயப் அக்தர் கிண்டலடித்தார்.
ஃபைனலில் பாகிஸ்தான் தோற்று கோப்பையை இழந்ததும், ஷோயப் அக்தர் இதயம் உடைந்த மாதிரி எமோஜியை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, மன்னிக்கவும் சகோதரரே.. இதற்கு பெயர் தான் கர்மா என்று அக்தருக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
Sorry brother
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
இந்நிலையில், ஷமிக்கு அறிவுரை கூறியுள்ளார் ஷாஹித் அஃப்ரிடி. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாஹித் அஃப்ரிடி, நாமெல்லாம் கிரிக்கெட்டர்கள். நாம் நமது நாடுகளின் தூதுவர்கள், முன்மாதிரிகள். எனவே இதுமாதிரியான விஷயங்களுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும். விளையாட்டின் மூலம் நமது உறவு மேம்பட வேண்டும். வெறுப்புணர்வை பரப்பக்கூடாது என்று அஃப்ரிடி ஷமிக்கு அறிவுரை கூறும் விதமாக பேசியுள்ளார்.
ஷமி அவராக எதுவும் பேசவில்லை. இந்திய அணியை கிண்டலடித்த அக்தருக்கு பதிலடி தான் கொடுத்தார். எனவே அஃப்ரிடி அறிவுரை கூறுவதென்றால், அவரது நாட்டு வீரர்களுக்குத்தான் கூறவேண்டும்.