டேவிட் வில்லிக்குப் பதிலாக களமிறங்கும் கிரிக்கெட் வர்ணனையாளர் கேதர் ஜாதவ்!

Published : May 01, 2023, 06:17 PM IST
டேவிட் வில்லிக்குப் பதிலாக களமிறங்கும் கிரிக்கெட் வர்ணனையாளர் கேதர் ஜாதவ்!

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரராக இருந்த டேவிட் வில்லி காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் லக்னோவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது வானம் கிளியரான நிலையில் உள்ளது. ஆதலால், இன்றைய போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உன்னுடைய பைத்தியக்காரத்தனத்தின் மூலமாக உன்னை நேசிக்கிறேன் -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராட் கோலி!

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லி காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் டாப்லீ ஐபிஎல் தொடரிலிந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி களமிறக்கப்பட்டார். தற்போது அவரும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆதலால், அவருக்குப் பதிலாக கேதர் ஜாதவ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலேயே சென்னை தோசைகள் தான் பெஸ்ட் - ஷாருக் கான்!

கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்த கேதர் ஜாதவ், 2016 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றார். இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த ஜாதவ் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்த ஜாதவ், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விலை போகவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

என்னதான் கடைசில வந்தாலும் சிக்ஸருக்கு மட்டும் பஞ்சமே இருக்காது: தோனியின் 20ஆவது ஓவர் ரெக்கார்டு!

பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஆர்சிபி அணிக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த வீரரும் இல்லாத நிலையில் தற்போது சிறந்த ஆல்ரவுண்டரான கேதர் ஜாதவ்வை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மராத்தி மொழிக்காக ஜியோ சினிமாவின் வர்ணனையாளராக கேதர் ஜாதவ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தான் மீண்டும் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ளார்.

1000ஆவது போட்டியில் வெற்றி பெற்று முத்திரை பதித்த மும்பை - பிறந்தநாளுக்கு வின்னிங் ட்ரீட் கொடுத்த ரோகித் சர்மா

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!