லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43 ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சொந்த மைதானத்தில் அதிகளவில் போட்டிகளில் விளையாடியுள்ளது. இன்னும் 2 வார காலத்திற்க் ஆர்சிபி மற்ற மைதானங்களில் விளையாடுகிறது. வரும் 21 ஆம் தேதி மீண்டும் தனது சொந்த மைதானமாக சின்னச்சாமி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
என்னதான் கடைசில வந்தாலும் சிக்ஸருக்கு மட்டும் பஞ்சமே இருக்காது: தோனியின் 20ஆவது ஓவர் ரெக்கார்டு!
ஆடுகளம் மோசமாக இருப்பதால் என்னவோ ரன்கள் சேர்ப்பது கடினம். எனினும், பொறுமையாகவே ஆட வேண்டும். இவ்வளவு ஏன் கடந்த போட்டியில் லக்னோ 257 ரன்கள் குவித்த நிலையில், இன்றைய போட்டியில் அதே உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஸ்டோய்னிஸ் இல்லையென்றால் அவருக்குப் பதிலாக குயிண்டன் டி காக் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு பிறகு சிறந்த வீரர்கள் என்று யாரும் இல்லை. தினேஷ் கார்த்திக் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில், முதல் 3 விக்கெட்டுகளை லக்னோ அணி கைப்பற்றிவிட்டால் எளிதில் வென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன்ஷியில் தோனி செய்த தவறு; கடைசியில் சொதப்பிய ஜடேஜா, மொயீன் அலி - சென்னையின் தோல்விக்கு காரணம்!
இன்று நடக்கும் போட்டிய்ல் லக்னோ வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஒருவேளை ஆர்சிபி வெற்றி பெற்றால் லக்னோ, சிஎஸ்கே, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் சேர்ந்து 10 புள்ளிகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் நடந்த 3 போட்டிகளில் 2ல் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டியிலும் ஆர்சிபி அணி தான் முதலில் பேட்டிங் ஆடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.