நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 3:17 PM IST
Highlights

இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதைவிட ஐபிஎல்லில் ஆட அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியை அடுத்த டி20 உலக கோப்பைக்கு தயார்படுத்த பிசிசிஐ உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்ததன் விளைவாக அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

இதையும் படிங்க - ஐபிஎல், உள்நாட்டு தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் தலைவிரித்தாடும் லஞ்சம்..! போலீஸிடம் கொத்தா சிக்கிய கும்பல்

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய சிறிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

டி20 உலக கோப்பை நடக்கும் இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் நடந்தது. டி20 உலக கோப்பையில் ஆடும் அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல்லில் ஆடினார்கள். அது டி20 உலக கோப்பைக்கான முன் தயாரிப்பாகவும் பயிற்சியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவே வினையாக அமைகிறது என்பது ரசிகர்களின் ஆதங்கம் மட்டுமல்லாது முன்னாள் ஜாம்பவான்கள் சிலரின் கருத்தும் கூட அதுவே.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

அந்தவகையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணியின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பை இப்போதே தொடங்க வேண்டும்.  இந்த டி20 உலக கோப்பையை முடித்த உடனேயே, அடுத்த உலக கோப்பைக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். ஐபிஎல்லுக்கும் டி20 உலக கோப்பைக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்திய வீரர்களுக்கு இப்போது நிறைய வாய்ப்பிருக்கிறது. அவற்றையெல்லாம் வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை என்பது என் கருத்து.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் சாதனையையே முறியடித்த முகமது ரிஸ்வான்..! தரமான சம்பவம்

வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதை விட ஐபிஎல்லில் ஆட அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் இதைப்பற்றி என்ன பேசுவது? நாட்டுக்காக ஆடுவதை பெருமையாக நினைக்க வேண்டும். ஐபிஎல்லில் ஆடும் வீரர்களின் பொருளாதார நிலை என்னவென்பது எனக்கு தெரியாது. அதனால் அதுகுறித்து மேலும் விரிவாக என்னால் பேசமுடியாது. ஆனால் நாட்டுக்காக ஆடுவதற்குத்தான் முக்கியத்துவம்கொடுக்க வேண்டும். ஐபிஎல்லில் ஆடவே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டிய மொத்த பொறுப்பும் பிசிசிஐ மீது உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் செய்த தவறுகளை திரும்பவும் செய்யக்கூடாது என்பதே இந்த தொடரில் இந்திய அணிக்கான பாடம் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

click me!