டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் சாதனையையே முறியடித்த முகமது ரிஸ்வான்..! தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 10:27 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் சாதனையையே முறியடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் முகமது ரிஸ்வான்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த டி20 உலக கோப்பையில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஒரே அணி பாகிஸ்தான் தான். இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து பெரிய அணிகளையும் விட அபாரமாக ஆடுவது பாகிஸ்தான் அணி தான்.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

இந்திய அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அனைத்து அணிகளையும் வீழ்த்தி அபார வெற்றி பெற்று,  10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவிப்பதற்கு அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் முக்கியமான காரணம். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் அருமையாக ஆடிவருகின்றனர்.

இதையும் படிங்க - இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க!ரோஹித்,ராகுல்,ரிஷப்லாம் வேண்டாம்-நெஹ்ராவின் சர்ப்ரைஸ் தேர்வு

இந்தியாவுக்கு எதிராக 79 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்த ரிஸ்வான், பாகிஸ்தானுக்காக அபாரமாக ஆடிவருகிறார். 

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனாலும் இந்த போட்டியில் 5 ரன்களை அடித்தபோது, டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் 1666  ரன்களை எட்டினார். இதன்மூலம் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின்(1665 ரன்கள் - 2015ம் ஆண்டில்) சாதனையை முறியடித்துள்ளார் ரிஸ்வான்.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானான கிறிஸ் கெய்லின் சாதனையையே முறியடித்துள்ளார் ரிஸ்வான். இந்த பட்டியலில் 2016ம் ஆண்டில் 1614 ரன்களை குவித்த இந்தியாவின் விராட் கோலி 3ம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க - IPL 2022 ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் ரவி சாஸ்திரி..! எந்த அணிக்கு தெரியுமா..?

click me!