காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன் நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்திற்கு வாக்கிங் ஸ்டிக் உதவியோடு காலை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதில், ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் அதிரடியாக ஆடி 92 ரன்கள் சேர்த்தார். போட்டியின் 12.3 ஆவது ஓவரை ஜோஷுவா லிட்டில் வீசினார். எதிர்முனையில் கெய்க்வாட் பேட்டிங் செய்தார்.
IPL 2023: தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பண்ட் கிடைத்தார் - கங்குலி!
அப்போது அவர் பந்தை சிக்சருக்கு விளாச பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த வில்லியம்சன் தாவி பந்தை கேட்ச் பிடிக்க முயற்சி செய்து வலது காலை அழுத்தமாக ஊன்றிய நிலையில், கீழே விழுந்தார். இதில், அவரது வலது காலின் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிக்ஸர் தடுக்கப்பட்ட போதிலும், பந்து பவுண்டரி லைனை தொடவே, பவுண்டரி கொடுக்கப்பட்டது. வலியால் துடித்த கேன் வில்லியம்சனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அவர் பேட்டிங் ஆட வரவேயில்லை. வீரர்கள் அமர்ந்திருக்கும் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.
IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற கேன் வில்லியம்சனுக்கு இந்த தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் பேசிய வீடியோவை குஜராத் டைட்டன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டது.
IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் உடன் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை: போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு!
அதில், அவர் கூறியிருப்பதாவது: “குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எஞ்சிய சீசனுக்கு வாழ்த்துகள். நான் உங்கள் அனைவருடனும் இருந்திருக்க விரும்புகிறேன், ஆனால் இருக்கக்கூடாது. மேலும் ரசிகர்களின் அன்பான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், விரைவில் குணமடைய காத்திருக்கிறேன், நன்றி" என்று பேசியுள்ளார். கேன் வில்லியம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நலமடையுங்கள் தம்பி என்று ரிப்ளே கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது நியூசிலாந்தில் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய கேன் வில்லியம்ன் தனியாக வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் காலை தூக்கிக் கொண்டு வெளியில் நடந்து சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது பேசிய கேன் வில்லியம்சன், தற்போது இது மிகவும் வேதனையாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
கேன் வில்லியம்சன் உலகக் கோப்பையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதோடு, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முக்கிய அம்சமாக உள்ளார். அவரது கால் காயம் குறித்து விரிவான பரிசோதனை முடியும் வரை நியூசிலாந்து அணிக்கு கவலையாகத் தான் இருக்கும். இன்று மாலைக்குள் கேன் வில்லியம்சன் டெஸ்ட் முடிவுகள் குறித்து முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று டெல்லியில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Painful to see Kane Williamson in this situation!
Wishing him a speedy recovery. pic.twitter.com/cngFRlQiyg