ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, சிஎஸ்கே கூட ஆடுறதும் ஆபத்துகிட்ட ஆதார் கேட்குறதும் ஒண்ணுதான் என்று ஹர்பஜன் சிங் டுவீட் செய்துள்ளார்.
ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சிஎஸ்கே அணி, இதற்கு முன் ஆடிய 13 சீசன்களில் 2 சீசன்களில் மட்டும்தான் பிளே ஆஃபிற்கு முன்னேறியதில்லை. மற்ற 11 சீசன்களில் பிளே ஆஃபிற்கு முன்னேறியது.
சிஎஸ்கே அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ முக்கிய காரணம் கேப்டன் தோனி தான். அந்த அணியை அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக வைத்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் சிஎஸ்கே அணி அதன் ஹோம் கிரவுண்டரன சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆடியது.
1427 நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆடிய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியை தழுவியது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. லக்னோவிற்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் டெவான் கான்வேவும் இணைந்து அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 57 ரன்களும், கான்வே 29 பந்தில் 47 ரன்களும் அடித்தனர். ஷிவம் துபே 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து மிடில் ஓவரில் கேமியோ ரோல் பிளே செய்தார். வெறும் 3 பந்துகளே எதிர்கொண்ட தோனி, 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழந்தார். 20 ஓவரில் 217 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, லக்னோவை 205 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியில் அபாரமாக பந்துவீசிய மொயின் அலி 4 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சிஎஸ்கே அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு பில்டப் கொடுக்கும் விதமாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டுவீட் செய்துள்ளார். சிஎஸ்கேவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் பதிவு செய்துள்ள ஹர்பஜன் சிங், சார் ரிலீஸ் ஆகியிருக்குற பத்துதல பாயும். விடுதலை வியக்க வைக்கும்னு ரிவியூ எழுதியிருப்பாங்க. அது கூட தல தோனி இந்த முறை ஐபிஎல் கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. சிஎஸ்கே கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒண்ணு என்று பதிவிட்டுள்ளார்.
சார் ரிலீஸ் ஆகியிருக்குற பாயும், வியக்க வைக்கும்ன்னு ரிவ்யூ எழுதிருப்பாங்க. அது கூட தல இந்த முறை கோதாவுல பந்தயம் அடிக்கறது உறுதின்னும் எழுத சொல்லுங்க. கூட விளையாடுறதும்,ஆபத்து கிட்ட ஆதார் கேக்குறதும் ஒன்னு.
— Harbhajan Turbanator (@harbhajan_singh)