ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று டெல்லியில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய நிலையில், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
அதேவேளையில், முதல் போட்டியில் லக்னோவிடம் படுதோல்வியடைந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்குக்கிறது.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறதா அல்லது பந்துவீசுகிறதா என்பதை பொறுத்து மனீஷ் பாண்டே - கலீல் அகமது ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் - பவுலிங்கை பொறுத்து சாய் சுதர்சன் - யஷ் தயால் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவர்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், ரோவ்மன் பவல், அமான் கான், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி, யஷ் தயால்/சாய் சுதர்சன்.