இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகிறார் ஜாண்டி ரோட்ஸ்..? இனிமேல் நம்ம டீமின் ஃபீல்டிங் வேற லெவல் தான்

By karthikeyan VFirst Published Jul 25, 2019, 10:09 AM IST
Highlights

பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. 

கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். 

பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார். 

ஃபீல்டிங் ஜாம்பவனாக திகழும் ஜாண்டி ரோட்ஸ், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம், வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இந்நிலையில், புதிய பயிற்சியாளர்களாக விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே, டாம் மூடி ஆகியோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்திருப்பதை ஜாண்டி ரோட்ஸே உறுதிப்படுத்தியுள்ளார். 

ஜாண்டி ரோட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரானால் இந்திய அணியின் ஃபீல்டிங் அடுத்த லெவலுக்கு செல்வது உறுதி. 
 

click me!