Virat Kohli, IPL 2024: கேட்ச் விட்டதால் வந்த வினை, ஒரே ஓவரில் 4, 4, 4, 0, 4 வெளுத்து கட்டிய கோலி!

By Rsiva kumar  |  First Published Mar 25, 2024, 10:28 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 6ஆவது போட்டியில் கோலிக்கு 2ஆவது பந்திலேயே கேட்ச் விட்டதால் அந்த ஓவரில் மட்டுமே 4 பவுண்டரி என்று மொத்தமாக 16 ரன்கள் அடித்துள்ளார்.


பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான ஐபிஎல் 6ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஷிகர் தவான் மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். பிராப்சிம்ரன் சிங் 25, ஜித்தேஷ் சர்மா 27, சாம் கரண் 23, ஷசாங்க் சிங் 21 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி அணியில் பவுலிங்கில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் எடுத்தனர். யாஷ் தயாள் மற்றும் அல்ஜாரி ஜோசஃப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

மேக்ஸ்வெல், சிராஜ் அட்டாக் பவுலிங்கை சமாளிச்சு 176 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் – ஆர்சிபி வெற்றி பெறுமா?

Tap to resize

Latest Videos

இதையடுத்து 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப் ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை சாம் கரண் வீசினார். கோலி பேட்டிங் செய்தார். முதல் பந்தில் ரன் எடுக்காத போது 2ஆவது பந்தில் கோலி ஆப் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிருந்த ஜானி பேர்ஸ்டோவிடம் சென்றது. ஆனால், பேர்ஸ்டோவ் அதனை தவறவிடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. அதன் பிறகு வரிசையாக ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். கடைசியாக 5ஆவது பந்திலும் ஒரு பவுண்டரி அடிக்க மொத்தமாக 16 ரன்கள் குவித்தார்.

இப்படியொரு ரோகித் சர்மாவா? தண்ணில சறுக்கி, ஆட்டம், பாட்டம் என்று ஹோலி கொண்டாடிய டான் – வைரல் வீடியோ!

தற்போது வரையில் விராட் கோலி 26 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். பீல்டிங்கின் போது விராட் கோலி பிடித்த ஒரு கேட்ச் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 173* கேட்ச்கள் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக அதிக கேட்ச் பிடித்தவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (172 கேட்சுகள்) உடன் இணைந்திருந்தார். தற்போது ரெய்னா சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மா 167 கேட்சுகள் பிடித்து அடுத்த இடத்தில் இருக்கிறார்.

ஆர்சிபி அணியில் அறிமுகமான மாயங்க் டாகர் யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் சேவாக்கின் மருமகன்!

click me!