#INDvsENG செமயா டைவ் அடித்து ஒற்றை கையில் ரூட் பிடித்த மிரட்டல் கேட்ச்..! வைரல் வீடியோ

Published : Feb 07, 2021, 08:59 PM IST
#INDvsENG செமயா டைவ் அடித்து ஒற்றை கையில் ரூட் பிடித்த மிரட்டல் கேட்ச்..! வைரல் வீடியோ

சுருக்கம்

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் அஜிங்க்யா ரஹானேவின் கேட்ச்சை ஒற்றை கையில் ஜோ ரூட் பிடித்த வீடியோ செம வைரலாகிவருகிறது.  

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பவுலிங், ஃபீல்டிங் இரண்டுமே சுமாராகவே இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் பவுலிங், ஃபீல்டிங், ஃபீல்டிங் செட்டப், திட்டமிடல் ஆகிய அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.

3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்துள்ளது. முக்கியமான வீரர்களான ரோஹித், கோலி, ரஹானே ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹானே வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டோமினிக் பெஸ் வீசிய பந்தை ரஹானே கவர் திசையில் அடிக்க, அதை ஷார்ட் கவர் திசையில் நின்ற ஜோ ரூட், அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். மிக அருமையான அந்த கேட்ச்சின் வீடியோ செம வைரலாகிவருகிறது. அந்த கேட்ச்சின் வீடியோ இதோ..
 

PREV
click me!

Recommended Stories

பங்காளி வங்கதேசத்திற்காக முரண்டு பிடிக்கும் பாகிஸ்தான்..? உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் இழுபறி
T20 World Cup 2026: தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட வங்கதேசம்.. ஸ்காட்லாந்துக்கு ஜாக்பாட்!