BAN vs IND டெஸ்ட்: ரோஹித் சர்மா விலகல்; 12 ஆண்டுக்கு பின் டெஸ்ட்அணியில் இடம்பிடித்த வீரர்! 4 வீரர்கள் சேர்ப்பு

By karthikeyan VFirst Published Dec 11, 2022, 8:22 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட இந்திய அணியை பார்ப்போம்.
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் விலகினர். எனவே வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே இரட்டை சத இன்னிங்ஸில் சீனியர் வீரரின் கெரியரை காலி செய்த இஷான் கிஷன்

முகமது ஷமி விலகிய நிலையில், 2010ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஜெய்தேவ் உனாத்கத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2010ல் முதல் டெஸ்ட்டில் ஆடிய உனாத்கத் அதன்பின்னர் இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் எடுக்கப்பட்டுள்ளார்.  

மற்றொரு ஃபாஸ்ட் பவுலரான நவ்தீப் சைனியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் ஆடிய நவ்தீப் சைனி, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஜடேஜாவிற்கு பதிலாக சௌரப் குமார் என்ற வீரர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணியை அபிமன்யூ ஈஸ்வரன் தான் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபியில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடி ரன்களை குவித்த வீரர் அபிமன்யூ. அதன்விளைவாக, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

இந்திய டெஸ்ட் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன், நவ்தீப் சைனி, சௌரப் குமார், ஜெய்தேவ் உனாத்கத்.
 

click me!