INDW vs AUSW: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! படுதோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா..?

Published : Dec 11, 2022, 06:59 PM IST
INDW vs AUSW: 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! படுதோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா..?

சுருக்கம்

மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 173 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனியின் அபாரமான பேட்டிங்கால்(89) 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஒரே இரட்டை சத இன்னிங்ஸில் சீனியர் வீரரின் கெரியரை காலி செய்த இஷான் கிஷன்

2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய மகளிர் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அஞ்சலி சர்வானி, மேக்னா சிங், ரேணுகா தாகூர் சிங்.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

பெத் மூனி, அலைசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தாலியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, லிட்ச்ஃபீல்ட், அனாபெல் சதெர்லேண்ட், ஹீதர் கிரஹாம், அலானா கிங், கிம் கார்த், மெகான் ஸ்கட்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!