அஷ்வின் ஆடியிருந்தா மட்டும் பெருசா என்ன செஞ்சுருப்பாருனு எனக்கு தெரியல..! பும்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Nov 1, 2021, 3:42 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடாதது குறித்து ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா பேசியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக, இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, 2 படுதோல்விகளுடன் இந்த தொடரை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி காம்பினேஷன் சரியாக தேர்வு செய்யப்படாததுதான் முக்கிய காரணம் என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர் ஆகிய வீரர்கள், 15 வீரர்களை கொண்ட மெயின் அணியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் காயத்தால் ஆடமுடியாமல் போனதால் இஷான் கிஷனை அணியில் எடுத்து அவரை கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டது இந்திய அணி. அதனால் ரோஹித் 3ம்  வரிசையிலும், கோலி 4ம் வரிசையிலும் இறங்கினர். இவ்வாறாக மொத்த பேட்டிங் ஆர்டரும் மாற்றப்பட்டது. இது தேவையில்லாத ஆணி.

இதையும் படிங்க - எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான்..! நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறிய இந்திய அணி கேப்டன் கோலி

இவற்றையெல்லாம் விட பெரிய கொடுமை என்னவென்றால், அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வினை 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் எடுத்துவிட்டு, அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டப்படுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஷ்வினை ஆடும் லெவனில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. மாயாஜால ஸ்பின்னர் என்ற பெயரில் அணியில் எடுக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி, பாகிஸ்தானுக்கு எதிராகவே எந்த மாயாஜாலமும் செய்யவில்லை. எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலாவது அஷ்வினை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அறிவுறுத்தினர்.

ஆனாலும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அஷ்வின் ஆடவைக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இப்படித்தான். அஷ்வினை 4 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடவைக்கவில்லை. இப்போது டி20 உலக கோப்பையிலும் அஷ்வின் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க - புள்ளப்பூச்சியை அடிக்கிற மாதிரி இந்திய அணியை அசால்ட்டா அடித்து காலி செய்து அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து..!

இந்நிலையில், அஷ்வின் ஆடாதது குறித்து பேசிய பும்ரா, போட்டிக்கு பின் வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இன்னும் அதிகமான ரன்கள் அடித்திருக்கலாம்; நிறைய விக்கெட் வீழ்த்தியிருக்கலாம் என்று என்ன வேண்டுமனாலும் சொல்லலாம். அஷ்வின் அனுபவம் வாய்ந்த பவுலர். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம் தரும். பவுலிங் யூனிட்டிற்கு வலுசேர்ப்பார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்

ஆனால் 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்தை க்ரிப்பாக பிடிக்க முடியவில்லை. பனிப்பொழிவின் காரணமாக 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருந்தது. அஷ்வின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று சொல்லலாமே தவிர, அதுதொடர்பாக இப்போதே ஜட்ஜ் செய்யமுடியாது என்று பும்ரா தெரிவித்தார்.

அதாவது, 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவதே கடினமாக இருப்பதால், அஷ்வினால் மட்டும் என்ன செய்திருக்க முடியும்? என்கிற ரீதியில் பும்ரா கருத்து கூறியிருக்கிறார்.
 

click me!