ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது..! பும்ரா - ரூட் இடையே கடும் போட்டி

By karthikeyan VFirst Published Sep 6, 2021, 10:19 PM IST
Highlights

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கிவருகிறது. அதற்காக, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடிய 3 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். அவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஐசிசி விருது வழங்கப்படும்.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஜஸ்ப்ரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அருமையாக ஆடிவருகிறார். ஆகஸ்ட் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா, லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஷமியுடன் இணைந்து பேட்டிங்கில் அசத்தினார். பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். 4வது டெஸ்ட்டிலும் அருமையாக பந்துவீசி முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலுமே சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அருமையாக பந்துவீசினார். முதல் டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகள் மற்றும் 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். 

இவர்கள் மூவரும் ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக விளையாடியிருப்பதால், இவர்களது பெயர்கள் ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 

click me!