ஆசிய கோப்பை, உலகக் கோப்பையை குறி வைத்த பும்ரா; ஒரு நாளைக்கு 7 ஓவர்கள் பந்து வீசி பயிற்சி!

By Rsiva kumar  |  First Published Jun 28, 2023, 1:41 PM IST

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு நாளில் 7 ஓவர்கள் வரையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளி வந்துள்ளது.


இந்திய அணியின் வீரர்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓய்வில் இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா வரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூலமாக இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Cricket World Cup 2023: இந்திய அணியில் இடம்பிடிக்க கூடிய 3 இளம் வீரர்கள் யார் யார் தெரியுமா?

Tap to resize

Latest Videos

ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத இந்திய அணி டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து மிகவும் முக்கியமான தொடர்களான ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற முழு உடல் தகுதி பெற வேண்டும் என்பதாக பும்ரா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் – சேவாக் கோரிக்கை!

இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா ஒரு நாளில் மட்டும் 7 ஓவர்கள் வரையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் முதல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்க உள்ள பயிற்சி போட்டிகளில் பும்ரா களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் பும்ராவின் முழு உடல் தகுதி குறித்து தெரியவரும்.

இந்தியா – அயர்லாந்து டி20 போட்டிக்கான அட்டவணை வெளியீடு: வெள்ளி, ஞாயிறுகளில் போட்டி வைத்தது மகிழ்ச்சி!

முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிட்டும். ஏனென்றால், அடுத்து ஆசிய கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடர்கள் இருக்கும் நிலையில், பும்ரா மீண்டும் காயம் அடைந்தால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனினும், பும்ரா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!

click me!