சச்சினுக்காக உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதைப், போன்று இந்த ஆண்டு விராட் கோலிக்காக இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், 3ஆவது போட்டியில் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரான நவம்பர் 19 ஆம் தேதி வரையில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது.
உலகக் கோப்பை அட்டவணை தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக முன்னாள் வீரர்கள் எந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு செல்லும், எந்த அணி டிராபியை கைப்பற்றும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!
மேலும், சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதனை சச்சின் டெண்டுல்கருக்காக அர்ப்பணித்தோம். அவருக்காக நாங்கள் உலகக் கோப்பை விளையாடினோம். தற்போது அவரைப் போன்று சிறந்த வீரராகவும், நல்ல மனிதராகவும் இருப்பவர் விராட் கோலி. இவருக்காகவே இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!