Cricket World Cup 2023: இந்திய அணியில் இடம்பிடிக்க கூடிய 3 இளம் வீரர்கள் யார் யார் தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jun 28, 2023, 12:24 PM IST

உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து, இந்தியா வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அயர்லாந்திற்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. அதன் பிறகு ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது.

விராட் கோலிக்காக உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் – சேவாக் கோரிக்கை!

Tap to resize

Latest Videos

உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிக்கு எந்த அணி செல்லும், இறுதிப் போட்டியில் எந்த டீம் ஜெயிக்கும் என்பது குறித்தெல்லாம் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று விளையாடினால், இந்திய அணி விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா – அயர்லாந்து டி20 போட்டிக்கான அட்டவணை வெளியீடு: வெள்ளி, ஞாயிறுகளில் போட்டி வைத்தது மகிழ்ச்சி!

ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்னும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் 2023 தொடரிகளிலும் இருவரும் இடம் பெற்று விளையாடியுள்ளனர். ரிங்கு சிங், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்கள் குவித்தார். இதில், 4 முறை அரைசதம் அடித்துள்ளார். இதில், 31 பவுண்டரி மற்றும் 29 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!

இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 625 ரன்கள் குவித்தார். இதில் அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்தார். மேலும், 82 பவுண்டரி, 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடர் மூலமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவாரா என்பது போட்டியின் போது தெரியவரும்.

டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!

இதையடுத்து, 3ஆவது இளம் வீரரான வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக அறிமுகமானார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதுவரையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 26 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று 14 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ஒரு முறை 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த இளம் வீரர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாடும் இந்திய அணியில் இடம் கிடைத்தால் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

click me!