நீங்க 5 பேரும் நல்ல ஆடுனா மட்டும்தான் தென்னாப்பிரிக்கா ஜெயிக்கும்!! இல்லைனா சோலி முடிஞ்சுது.. லெஜண்ட் ஆல்ரவுண்டர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 2:29 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை அடுத்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளையும் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.

முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.

டுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு அடி மேல் அடியாக விழுந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது. 

முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு இன்று நியூசிலாந்து அணியுடன் மோதும் போட்டியை சேர்த்து மொத்தம் 4 போட்டிகள் மீதமுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை அடுத்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளையும் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த நான்கு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்க அணி வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பு இருக்கவாவது செய்யும். ஆனால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி ஜெயித்தால்கூட, டாப் 4 இடங்களில் இருக்கும் ஏதாவது ஒரு அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்தால்தான் தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு. 

எனவே தென்னாப்பிரிக்க அணி இனிமேல் அரையிறுதிக்கு தகுதிபெறுவது சாத்தியமில்லாத விஷயம். இந்நிலையில், இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி. இந்நிலையில், கட்டாயமாக வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால், அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர வீரர்களான டுப்ளெசிஸ், டி காக், ஆம்லா, ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் அவர்களின் அல்டிமேட்டான பெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என காலிஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!