#BBL ஃபைனலில் காட்டடி அடித்து கடைசியில் சதத்தை தவறவிட்ட வின்ஸ்! பெர்த் அணிக்கு கடினஇலக்கை நிர்ணயித்த சிக்ஸர்ஸ்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 4:01 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, ஜேம்ஸ் வின்ஸின்(95 ரன்கள்) அதிரடியால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸுக்கு 189 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது சிட்னி சிக்ஸர்ஸ் அணி.
 

பிக்பேஷ் லீக் ஃபைனல் சிட்னியில் நடந்துவருகிறது. சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஃபைனலில் டாஸ் வென்ற ஸ்கார்ச்சர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் ஃபிலிப் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டேனியல் ஹியூக்ஸ்(13), கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ்(18) என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் ஜேம்ஸ் வின்ஸ் நிலைத்து நின்று அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகம் குறையாமல் சீரான வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய வின்ஸ், 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஐந்து ரன்களில் சதத்தை தவறவிட்டார். 60 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் அடித்து, சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு நல்ல ஸ்கோரை செட் செய்து கொடுத்துவிட்டு, பதினாறாவது ஓவரில் தான் ஆட்டமிழந்தார் வின்ஸ். எனினும் அவர் கடைசி வரை நின்று ஆடியிருந்தால், டெத் ஓவர்களில் இன்னும் கூடுதலாக ஸ்கோர் செய்திருக்கலாம். 

வின்ஸ் ஆட்டமிழந்ததால் புதிய பேட்ஸ்மேன் களத்திற்கு வர நேர்ந்ததால், டெத் ஓவர்களில் ஸ்கோர் குறைந்தது. அதனால் 20 ஓவர்களில் 188 ரன்கள் அடித்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. வின்ஸ் நின்றிருந்தால், 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கலாம். ஆனால் இதுவும் மிகச்சிறந்த ஸ்கோர் தான். ஃபைனலில் 189 ரன்கள் என்ற இலக்கு சற்றே கடினமானது. அந்த கடின இலக்கை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் விரட்டுகிறது.
 

click me!