மோசமான சாதனை படைத்த இஷான் கிஷான்: அதுக்கு பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமா?

Published : Feb 01, 2023, 08:31 PM ISTUpdated : Feb 01, 2023, 08:32 PM IST
மோசமான சாதனை படைத்த இஷான் கிஷான்: அதுக்கு பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமா?

சுருக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.  

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் முதலில் களமிறங்கி இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.

மீண்டும் வாய்ப்பு இழந்த பிருத்வி ஷா: அதிரடி காட்ட தயாரான இந்தியா டாஸ் வென்று பேட்டிங்!

முதல் ஓவரை நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் பென் லிஸ்டெர் வீசினார். அதனை இஷான் கிஷான் எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து, மைக்கேல் பிரேஸ்வெல் 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷான் கிஷான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நடுவர் அவுட் கொடுத்தாலும், அதை மறுத்து, மேல்முறையீடு செய்தார். டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பில் படுவது தெளிவாக தெரியவர நடையை கட்டினார்.

முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்: டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ்!

இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், கடந்த 14 டி20 போட்டிகளில் முறையே இஷான் கிஷான் 27, 15, 26, 3, 8, 11, 36, 10, 37, 2, 1, 4, 19 மற்றும் 1 இந்தப் போட்டி என்று ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை. தொடர்ந்து மோசமான பார்மில் இருக்கும் இஷான் கிஷானுக்குப் பதிலாக பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் சொதப்பி வரும் இஷான் கிஷானை கடுமையாக விமர்சித்து வருவதோடு, பிருத்வி ஷாவிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷானைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி தன் பங்கிற்கு அதிரடி காட்டி விளையாடினார். 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூரயகுமார் யாதவ்வும் ஓரளவு ரன் எடுத்தார். அவர் 13 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெளியேறினார்.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!