முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்: டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumarFirst Published Feb 1, 2023, 4:58 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிறார்.
 

இந்திய அணி 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் போட்டியில் தனக்கென்று தனி இடத்தை ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்துள்ளார். 4ம் வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக நடந்த வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான 2 ஒருநாள் தொடர்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!

டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசையை பிடித்திருந்தாலும், ஒருநாள் அணியில்  ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4ம் வரிசை வீரர். இந்திய ஒருநாள் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துவிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டாலும், சூர்யகுமார் யாதவ்விற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு இன்னும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமாகாத நிலையில், ஆஸ்திராலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

ஓரிரு வார ஓய்விற்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs NZ 3rd T20: மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு விழா!

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்

click me!