கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!

By Rsiva kumarFirst Published Feb 1, 2023, 4:19 PM IST
Highlights

காயத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நின்று இடது கையால் பேட்டிங் செய்த ஆந்திர பிரதேச அணியின் கேப்டன் ஹனுமா விஹாரியை பலரும் பாராட்டி வருகின்றனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ரஞ்சி டிராபி தொடர் நடந்து வருகிறது. வரும் 20 ஆம் தேதி வரையில் நடக்கும் இந்தப் போட்டியில் 37 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இறுதிப் போட்டியை நெருங்கிய இந்த தொடரில், 4ஆவது காலிறுதிப் போட்டி நேற்று முதல் நடந்து வருகிறது. இதில், மத்தியப் பிரதேச அணியும், ஆந்திர பிரதேச அணியும் மோதின. இந்தூரில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்தியப்பிரதேச அணியின் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்டவா பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 127.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்கள் எடுத்தது.

 

Sydney 2021 - 23*(161) & Indore 2023 - 27(57)

Take a bow, Vihari. A born fighter. pic.twitter.com/gc2d1jjiuT

— Johns. (@CricCrazyJohns)

 

ஆந்திர பிரதேச அணியின் கேப்டனான ஹனுமா விஹாரி வலது கை பேட்ஸ்மேன் (Right Hand Batsman). நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் போது ஹனுமா விஹாரிக்கு கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. மத்தியப்பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் வீசிய பந்து, ஹனுமா விஹாரியின் இடது கையின் மணிக்கட்டு பகுதியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவர் உடனடியாக வெளியில் சென்று அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், ஹனுமா விஹாரிக்கு இடது கையில் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் 5 அல்லது 6 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மகள் வாமிகா உடன் டிரக்கிங் சென்ற விராட் கோலி: வைரலாகும் புகைப்படங்கள்!

ஆந்திரா அணியின் ரிக்கி பூய் 250 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கும். இதே போன்று கரண் சிண்டே 264 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 2 சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டர்கள் அடங்கும். இவர்கள், இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 170 ரன்கள் வரை சேர்த்தனர். இதனால், ஹனுமா விஹாரி நேற்றைய நாளில் மீண்டும் களத்திற்கு வரவில்லை. இந்த நிலையில், இன்றைய நாளில் விக்கெட்டுகள் விழவே, ஹனுமா விஹாரி மீண்டும் களத்திற்கு வந்தார்.

IND vs NZ 3rd T20: மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு விழா!

ஹனுமா விஹாரி ரைட் ஹேண்டேடு பேட்ஸ்மேன். ஆனால், இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் லெப்ட் ஹேண்டில் பேட்டிங் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடது கையில் பேட்டிங் செய்து, பவுண்டரி அடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் ஒரே கையால் பேட்டிங்கும் செய்தார்.

ஆனால், பெரிய அளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், அவரது துணிச்சலும், தைரியமும் மற்ற வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. 57 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். காயத்தையும் பொருட்படுத்தால் துணிச்சலாக ஆடி வந்த ஹனுமா விஹாரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் தொடரில் கேமரூன் இடம் பெறுவார்: ஆண்ட்ரூ மெக் டொனால்டு திட்டவட்டம்!

இவ்வளவு ஏன், தினேஷ் கார்த்திக் கூட ஹனுமா விஹாரிக்கு பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இடது கையால் அதுவும் ஒரே கையால் பேட்டிங் விளையாடிய உங்களது துணிச்சல் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Hanuma Vihari

Batting LEFT handed and also more importantly just with one hand , the top hand😳

Bravery to another level 🫡

— DK (@DineshKarthik)

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்பதற்காக தொடையிலும் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் ஹனுமா விஹாரி விளையாடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. அதை இங்கு நினைவு கூருவதற்கு காரணம் என்னவென்றால், இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதையும் பொருட்படுத்தால், களத்திற்கு திரும்பி வந்து இடது கையால் அதுவும் ஒரே கையால் பேட்டிங் ஆடிய அவரது திறமையையும், துணிச்சலையும் இங்கு பாராட்ட வேண்டும்.

 கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்பதற்காக தொடையிலும் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் ஹனுமா விஹாரி விளையாடினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. அதை இங்கு நினைவு கூருவதற்கு காரணம் என்னவென்றால், இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதையும் பொருட்படுத்தால், களத்திற்கு திரும்பி வந்து இடது கையால் அதுவும் ஒரே கையால் பேட்டிங் ஆடிய அவரது திறமையையும், துணிச்சலையும் இங்கு பாராட்ட வேண்டும்.

click me!