ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி நடந்து காட்டி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடி 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், குசால் பெரேரா, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தசுன் ஷனாகா ஆகியோர் டக் அவுட் முறையில் வெளியேறினர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்கள் -ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!
பின்னர் இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து அதிக பந்துகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா 8 ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியது. ரோகித் சர்மா தனது 250ஆவது ஒரு நாள் போட்டியில் 2ஆவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.
Si Lanka vs India: வங்கதேச போட்டியில் தோல்வி, ஒரு கேப்டனாக தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்!
இந்த தொடரில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ்விற்கு தொடர் நாயகன் விருதும், இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் இருவரும் ஒருவரையொருவர் ஒருவர் போன்று ஒருவர் நடந்து காட்டி மாறி மாறி கலாய்த்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Ishan Kishan doing a Virat walk - Virat Kohli with the counter 😂😂 pic.twitter.com/u57DWmmJ7L
— रोहित जुगलान Rohit Juglan (@rohitjuglan)