இவரை மாதிரி பிளேயர்லாம் அரிதினும் அரிது.. தனித்துவமான டேலண்ட் அந்த பையன்.! இர்ஃபான் பதான் புகழாரம்

By karthikeyan VFirst Published Feb 2, 2021, 9:04 PM IST
Highlights

குல்தீப் யாதவ் தனித்துவமான வீரர்; அவரை அணியில் சேர்க்காவிட்டாலும் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

ஆஸி., சுற்றுப்பயணத்தில் முக்கியமான வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், கடைசி வரை அணியில் வாய்ப்பே பெறாத வீரர் குல்தீப் யாதவ். அஷ்வின், ஜடேஜா ஆகிய 2 பிரைம் ஸ்பின்னர்களும் காயத்தால் கடைசி போட்டியில் ஆடாத போது கூட, வாஷிங்டன் சுந்தர் தான் அணியில் எடுக்கப்பட்டாரே தவிர, குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அஷ்வின், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் காயத்தால் வெளியேறியதால், பேட்ஸ்மேன்களுக்கு குறைபாடு ஏற்பட்டது. அதனால் பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டு பேட்டிங்கும் நன்றாக ஆடத்தெரிந்த ஸ்பின்னருக்கான தேவையிருந்ததால் வாஷிங்டன் சுந்தர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

அதனால் ஏகப்பட்ட வீரர்கள் காயத்தால் வெளியேறியபோதிலும், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தத்தை கேப்டன் ரஹானே மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்ததுடன், அவருக்கான நேரம் வரும் என்று இங்கிலாந்து தொடரை சுட்டிக்காட்டி நம்பிக்கையளித்துள்ளனர்.

ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களை இந்திய அணி நிர்வாகம் சிறப்பாக கையாள்கிறது. அதனால்தான் அவர்களால் கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமையை நிரூபிக்க முடிகிறது. அதற்கு, ஆஸி., சுற்றுப்பயணமே ஒரு சிறந்தன் உதாரணம். அந்தவகையில், ஆஸி., சுற்றுப்பயணத்திற்கான பிரைமரி அணியில் இடம்பெற்றிருந்தும் கூட, கடைசி வரை ஆடும் லெவனில் இடம் கிடைக்காத குல்தீப் யாதவின் தன்னம்பிக்கை தளர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது இந்திய அணி நிர்வாகம்.

இந்நிலையில், சைனாமேன்(இடது கை ரிஸ்ட் ஸ்பின்) பவுலர் கிடைப்பதெல்லாம் அரிதினும் அரிது. எனவே குல்தீப் யாதவை பொத்திப்பாதுகாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான்.

இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களின் மனநிலையை சரியாக பேணிக்காப்பது அணி நிர்வாகத்தின் பார்வையில் முக்கியமானது. அந்தவகையில் இந்திய அணி நிர்வாகம் அதை சரியாக செய்வதாகவே பார்க்கிறேன். அதனால்தான் இளம் வீரர்கள் நன்றாக ஆடுகிறார்கள். குல்தீப் யாதவிற்கு ஆதரவாக அணி நிர்வாகம் இருக்கிறது என நம்புகிறேன். குல்தீப் யாதவ் மிகச்சிறந்த திறமைசாலி. இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் எல்லாம் தினமும் கிடைக்கமாட்டார்கள். அவர் தனித்துவமான வீரர் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

click me!