இலங்கையிடம் காட்டுன மாதிரிலாம் இங்க ஆட்டம்காட்ட முடியாது;எங்க ஆளுங்க கில்லி!ரூட்டை பகிரங்கமா எச்சரித்த கம்பீர்

Published : Feb 02, 2021, 03:53 PM ISTUpdated : Feb 02, 2021, 03:55 PM IST
இலங்கையிடம் காட்டுன மாதிரிலாம் இங்க ஆட்டம்காட்ட முடியாது;எங்க ஆளுங்க கில்லி!ரூட்டை பகிரங்கமா எச்சரித்த கம்பீர்

சுருக்கம்

இலங்கையில் ஆடியதை போன்ற அபாரமான பேட்டிங்கை ஜோ ரூட்டால் இந்தியாவில் ஆடமுடியாது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடக்கவுள்ளன.

முதல் 2 டெஸ்ட் சென்னையில் நடக்கவுள்ளதால் சென்னைக்கு வந்த இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலுமே இலங்கையை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.

இலங்கையை வீழ்த்திய அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்பதை அறிந்து, அதற்காக சரியான திட்டமிடலுடன் தீவிர பயிற்சி எடுத்துவருகிறது.

இலங்கையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடினார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இரட்டை சதமும், 2வது டெஸ்ட்டில் 186 ரன்களும் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார். இலங்கைக்கு எதிராக நன்றாக ஆடிய அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இந்தியாவிற்கு வந்துள்ளார் ஜோ ரூட்.

ஆனால் இலங்கையில் ஆடியதை போன்று இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி பேட்டிங் ஆட முடியாது என்று கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், ஜோ ரூட்டுக்கு இந்தியாவில் ஆடுவது முற்றிலும் வித்தியாசமான சவாலாக இருக்கும். இலங்கையில் ரூட் சிறப்பாக ஆடினார். ஆனால் இந்தியாவில், எந்தவிதமான ஆடுகளத்திலும் அபாரமாக வீசக்கூடிய பும்ராவின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடுவது சவாலான காரியம். அதேபோல, ஆஸி.,யில் அபாரமாக வீசி உச்சகட்ட தன்னம்பிக்கையுடனு திகழும் அஷ்வின் பவுலிங்கை எதிர்கொள்வதும் கடினம். எனவே இந்தியாவில் ஆடுவது ரூட்டுக்கு முற்றிலும் சவாலான காரியமாகவே அமையும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!