விராட் கோலியின் பிரச்னை அவரது பேட்டிங் டெக்னிக் அல்ல; அவரது ஆதிக்க மனநிலை தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 3:15 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி படுமோசமாக சொதப்பிவரும் நிலையில், உண்மையாகவே அவரது பிரச்னை என்னவென்பதை இர்ஃபான் பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

விராட் கோலி 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமே அடிக்கவில்லை. 2 ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி 2 ஆண்டுகளாக சதமடிக்கமுடியாமல் திணறிவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில், இதுவரை 5 இன்னிங்ஸ்களில் 24.80 என்ற மோசமான சராசரியுடன் 124 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரேயொரு அரைசதம் மட்டும் அடக்கம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், கோலி நன்றாக ஆடி ஸ்கோர் செய்தாக வேண்டும். ஆனால் கோலியோ ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை எல்லாம் விரட்டி விரட்டி அடித்து அவுட்டாகிவருகிறார்.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே விராட் கோலியின் பிரச்னையாக இருப்பது அவரது ஆர்வக்கோளாறு தான். பொதுவாக அவசரப்படாமல் நிதானமாக களத்தில் நிலைத்து நின்று தெளிவாக ஆடக்கூடியவர் கோலி. ஆனால் இந்த தொடரில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விடாமல், அதை விரட்டி சென்று டிரைவ் ஆடமுயன்று விக்கெட்டை இழக்கிறார்.

இந்த தொடர் முழுவதுமாகவே, ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்துகளை விரட்டி அடிக்க முயன்று, ஸ்டம்ப்புக்கு பின்னால் தான் விக்கெட்டை இழந்திருக்கிறார். விராட் கோலியின் பேட்டிங் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் ஜாம்பவான்கள் பலரும், அவர் கவர் ஷாட் ஆடுவதை தவிர்த்தால் பெரிதாக ஸ்கோர் செய்யலாம் என்று அறிவுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், கோலி பேட்டிங்கில் ஸ்கோர் செய்யமுடியாமல் சொதப்புவதற்கு என்ன காரணம் என்பதை மிகத்தெளிவாகவும் சரியாகவும் கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். 

கோலி குறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக்கிலோ, அவரது தயாரிப்பிலோ எந்த பிரச்னையும் இல்லை. பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் விராட் கோலி, அதனால் தான் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விரட்டிச்சென்று ஆடுகிறார். எனவே பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அவரது ஆதிக்க மற்றும் ஆக்ரோஷ மனநிலை தான் அவருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது இர்ஃபான் பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

click me!