#ENGvsIND 4வது டெஸ்ட்: உத்தேச இங்கிலாந்து அணி.. ஸ்டோக்ஸ் இல்லாத குறையை தீர்க்க வருகிறார் செம ஆல்ரவுண்டர்

By karthikeyan VFirst Published Aug 30, 2021, 10:04 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமனில் உள்ளது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டிகள் என்பதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன.

4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. அந்த போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது. எனவே பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் செய்வார். பட்லருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் அடுத்த டெஸ்ட்டில் ஆட வாய்ப்புள்ளது. மார்க் உட் ஆடினால், ஓவர்டன் நீக்கப்படுவார்.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாத குறையை தீர்க்க வருகிறார், அவரைப்போன்ற மற்றொரு தரமான ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ். அவரது வருகை இங்கிலாந்து அணி காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும்.

4வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 

click me!