#ENGvsIND 4வது டெஸ்ட்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்..?

Published : Aug 30, 2021, 09:51 PM IST
#ENGvsIND 4வது டெஸ்ட்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்..?

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமனில் உள்ளது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் போட்டிகள் என்பதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித்தும் ராகுலும் நன்றாக ஆடிவருகின்றனர். ஆனால் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவருவது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. 

பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. 3வது டெஸ்ட்டில் முழங்காலில் காயமடைந்த ஜடேஜா 4வது டெஸ்ட்டில் ஆட வாய்ப்பில்லை. எனவே அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆடுவார். 

அஷ்வினை அணியில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் முதல் டெஸ்ட்டிலிருந்தே இருந்துவரும் நிலையில், 4வது டெஸ்ட்டில் தான் அவர் ஆடவுள்ளார். 

ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவின் ரன்னப் கடந்த டெஸ்ட்டிலேயே சரியாக இல்லை. அது அவர் நல்ல ரிதமில் இல்லை என்பதை பறைசாற்றியது. எனவே அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!