
அயர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரைன். 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணியில் அறிமுகமான கெவின் ஓ பிரைன், அயர்லாந்து அணிக்காக 16 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடினார்.
ஆல்ரவுண்டரான கெவின் ஓ பிரைன் அயர்லாந்து அணிக்காக 152 ஒருநாள் போட்டிகளில் 3619 ரன்கள் அடித்துள்ளார்; 114 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 109 டி20 போட்டிகளில் ஆடி 1973 ரன்கள் அடித்துள்ளார்; 58 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை செய்துள்ள கெவின் ஓ பிரைன், வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.
இதையும் படிங்க - ZIM vs IND: ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலிருந்து காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் அறிவிப்பு
38 வயதான அயர்லாந்து ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரைன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்தார். வரும் அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சீனியர் ஆல்ரவுண்டரான கெவின் ஓ பிரைன் ஓய்வு அறிவித்தது அயர்லாந்து அணிக்கு சற்றே பின்னடைவாக இருக்கும்.