சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமனம்..! ஹெட்கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

By karthikeyan VFirst Published Aug 15, 2022, 8:43 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் ஆடவுள்ள ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, தென்னாப்பிரிக்காவில் புதிய டி20 லீக் தொடரை நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இந்த தொடர் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் 6 அணிகள் ஆடுகின்றன. அந்த 6 அணிகளையும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் வாங்கியுள்ளனர்.

இதையும் படிங்க - ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?

1. கேப்டவுன் - முகேஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்)
2. ஜோஹன்னஸ்பர்க் - என் ஸ்ரீநிவாசன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
3. டர்பன் - சஞ்சீவ் கோயங்கா (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்)
4. போர்ட் எலிசபெத் - கலாநிதி மாறன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
5. பிரிட்டோரியா - பார்த் ஜிண்டால் (டெல்லி கேபிடள்ஸ்)
6. பார்ல் - மனோஜ் படாலே (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ஜோஹன்னஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தான் வாங்கியுள்ளது. எனவே அந்த அணிக்கு ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டு, சிஎஸ்கே அணியில் ஆடும்/ஆடிய சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரர்களை ஜோஹன்னஸ்பர்க் அணிக்கும் எடுத்துள்ளது.

ஒவ்வொரு அணியும் ஆரம்பக்கட்டமாக 5 வீரர்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்காக அபரிமிதமான பங்களிப்பு செய்து சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ஃபாஃப் டுப்ளெசிஸை எடுத்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது.

இதையும் படிங்க - இந்தியாவால் அதை பண்ண முடியும்;நம்மால் முடியுமா? சத்தியமா முடியாது! பாக்.,கிரிக்கெட்டுக்கு சல்மான் பட் சவுக்கடி

டுப்ளெசிஸுடன், மொயின் அலி, மஹீஷ் தீக்‌ஷனா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெஃபெர்டு, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரான ஜெரால்டு கோயட்ஸீ ஆகியோரையும் எடுத்துள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாஃப் டுப்ளெசிஸும், தலைமை பயிற்சியாளராக ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

click me!