வில் ஜாக்ஸ் காட்டடி சதம்.. கடின இலக்கை 82 பந்தில் அடித்து ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி அபார வெற்றி

Published : Aug 15, 2022, 07:04 PM IST
வில் ஜாக்ஸ் காட்டடி சதம்.. கடின இலக்கை 82 பந்தில் அடித்து ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி அபார வெற்றி

சுருக்கம்

வில் ஜாக்ஸின் அதிரடி சதத்தால் 100 பந்துகள் கிரிக்கெட் தொடரான தி ஹண்ட்ரெட் தொடரில், சதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான போட்டியில் 138 ரன்கள் என்ற கடின இலக்கை 82 பந்தில் அடித்து அபார வெற்றி பெற்றது ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி.  

தி ஹண்ட்ரெட் என்ற 100  பந்துகள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. லண்டனில் நடந்த போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஓவல் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய சதர்ன் பிரேவ் அணியில் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 27 பந்தில் 37 ரன்களும், டிம் டேவிட் 17 பந்தில் 22 ரன்களும் அடித்தனர். 

இதையும் படிங்க - ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய 3ம் வரிசை வீரர்..! தரமான சாய்ஸ்

மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் அடித்து சிறிய பங்களிப்பு செய்ய, 100 பந்தில் சதர்ன் பிரேவ் அணி 137 ரன்கள் அடித்தது. 138 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஓவல் அணிக்கு நிர்ணயித்தது.

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஓவல் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான வில் ஜாக்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் ரிலீ ரூசோ (10) மற்றும் சாம் பில்லிங்ஸ் (8) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?

ஆனால் அதிரடியாக ஆடி சதமடித்த வில் ஜாக்ஸ், 48 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். வில் ஜாக்ஸின் அதிரடியால் 82 பந்தில் இலக்கை அடித்து ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!