நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில வீரர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படு ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரும் அணியும் விடுவிக்கும் மற்றும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதனால், ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
26ஆவது முறையாக உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய வீரர் பங்கஜ் அத்வானி!
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. சிஎஸ்கே அணியில் தோனி இருக்கும் வரையில் பலவீனம் என்றே சொல்ல முடியாது. எனினும், அணியை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் மினி ஏலத்தில் குறைந்த தொகை பட்ஜெட்டில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளிலிருந்து சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ அணிக்கு டாட்டா காட்டி விட்டு மீண்டும் கேகேஆர் அணியில் இணைந்த கவுதம் காம்பீர்!
அவர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா உமர்சாய், தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெரால்டு கோட்ஸி, இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சதீரா சமரவிக்ரமா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிஎஸ்கே அணியில் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படலாம். நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் உமர்சாய் 9 போட்டிகளில் விளையாடி 350 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 7 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி 6ஆவது முறையாக உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது.
வெற்றியோடு நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ் – வரவேற்க ரசிகர்கள் இல்லை – வைரலாகும் வீடியோ!
மேலும், இவர், 6 சீசன்கள் விளையாடி 42 போட்டிகளில் 48 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த சிசாண்டா மகாலா இந்த சீசனில் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கெரால்டு கோட்ஸி அணியில் எடுக்க வாய்ப்பிருக்கிறது. இதே போன்று, இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான சதீரா சமரவிக்ரமாவும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.