ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் முடிந்துவிட்ட நிலையில், சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவாக இருக்கும் என்று பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் நேற்று கொச்சியில் நடந்தது. சாம் கரன் (ரூ.18.5 கோடி), கேமரூன் க்ரீன் (ரூ.17.5 கோடி), பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.25 கோடி) ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு விலைபோனார்கள்.
சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் (ரூ.1 கோடி), அஜிங்க்யா ரஹானே (ரூ.50 லட்சம்), நிஷாந்த் சிந்து (ரூ.60 லட்சம்), ஆல்ரவுண்டர்கள் பகத் வர்மா (ரூ.20 லட்சம்) மற்றும் அஜய் மண்டால் (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
IPL 2023: அடுத்த கேப்டன் யார்..? சிஎஸ்கே சி.இ.ஓ தகவல்
ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே தொடக்க வீரர்கள். 3 மற்றும் 4ம் வரிசைகளில் மொயின் அலி மற்றும் அம்பாதி ராயுடு ஆகியோர் ஆடுவார்கள். அதன்பின்னர் ஆல்ரவுண்டர்கள் ஸ்டோக்ஸ், ஜடேஜா ஆகியோரும் 7ம் வரிசையில் தோனியும் பேட்டிங் ஆடுவார்கள். ஜடேஜா, ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப களமிறக்கப்படுவார்கள். அவர்களுக்கு நிலையான ஒரு பேட்டிங் ஆர்டரில் இறக்கப்பட வாய்ப்பில்லை.
ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்களுடன் 3வது ஸ்பின்னராக மஹீஷ் தீக்ஷனா ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி ஆகிய மூவரும் ஆடுவார்கள். பென் ஸ்டோக்ஸும் பந்துவீசுவார். எனவே சிஎஸ்கே அணிக்கு 7 பவுலிங் ஆப்சன் உள்ளது. தீபக் சாஹரும் பேட்டிங் ஆடுவார் என்பதால் 8ம் பேட்டிங் ஆர்டர் வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பேட்டிங் டெப்த்தும் வலுவாக இருக்கும்.
IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்
சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மஹீஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.