IPL 2021 பாண்டிங் சார் டிரெஸிங் ரூம்ல பேசுறத கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கும்! DC இளம் வீரர் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Oct 1, 2021, 3:51 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஓய்வறையில் பேசும்போது உடம்பெல்லாம் புல்லரித்துவிடும் என்று இளம் ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் படுமோசமான அணியாக திகழ்ந்த அணி என்றால் அது டெல்லி அணி தான். ஐபிஎல்லில் முதல் 12 சீசன்களில் ஒரு சீசனில் கூட ஃபைனலுக்கு முன்னேறாத ஒரு அணி என்றால் அது டெல்லி கேபிடள்ஸ் தான். டெல்லி அணியை வலுவாக்க நினைத்த அந்த அணி நிர்வாகம், ஆஸி., முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரான ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனான ரிக்கி பாண்டிங், மிகச்சிறந்த தலைமைத்துவ பண்புகள் கொண்டவர். டெல்லி கேபிடள்ஸ் அணியில் இளம் வீரர்களை எடுத்து, அவர்களின் திறமைகளை மெருகேற்றி வலுவானதொரு அணியை கட்டமைத்தார் ரிக்கி பாண்டிங். அதற்கான பலனை கடந்த 2 சீசன்களாக பெற்றுவருகிறது அந்த அணி.

கடந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணி, சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. ஆனால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் உறுதியுடன் ஆடிவரும் டெல்லி அணி, ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் அருமையாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட டெல்லி அணி, இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.

கடந்த 2-3 சீசன்களாக டெல்லி கேபிடள்ஸ் அணியின் வெற்றிகரமான அணியாக ஐபிஎல்லில் வெற்றிநடை போடுவதற்கு முக்கிய காரணம் ரிக்கி பாண்டிங் தான்.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் வளர்ந்துவரும் இளம் ஃபாஸ்ட் பவுலரான ஆவேஷ் கான், ரிக்கி பாண்டிங் குறித்து பேசியுள்ளார்.

பாண்டிங் குறித்து பேசிய ஆவேஷ் கான், ரிக்கி சாருடன் எனக்கு இது 4வது வருடம். லெஜண்ட் கிரிக்கெட்டர் மட்டுமல்லாது அவர் மிகச்சிறந்த பயிற்சியாளரும் கூட. ஆட்டத்தின் மனரீதியான விஷயங்கள் குறித்துத்தான் அதிகம் பேசுவார். ஓய்வறையில் அவர் பேசுவதை கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரித்துவிடும். அவர் திறந்த மனதுடன் அனைத்து வீரர்களுடனும் பேசுவார். அவரிடம் எதுகுறித்து வேண்டுமானாலும் கேட்கலாம்; பேசலாம் என்று ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
 

click me!